Temple administration announces ban on drone video and reels in Tiruchendur temple premises-திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ட்ரோன் வீடியோ, ரீல்ஸ் எடுக்க தடை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Spread the love

அந்த அறிவிப்பில், “திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடவும், செல்போன் மற்றும் வீடியோ கேமராக்கள் மூலம் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்கள் எடுக்கவும் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை மீறி யாராவது ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரை

திருச்செந்தூர் கோயில் கடற்கரை

அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதேபோல், கோயில் வளாகத்தில் செல்போன் மூலம் வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் வளாகம், சண்முக விலாச மண்டபம், வசந்த மண்டபம், கோவிலுக்கு உள்ளே வரும் டோல்கேட் பகுதி, வட்டாட்சியர் அலுவலகம், தேரடி பகுதி என பல்வேறு இடங்களில் இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *