'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' – CSK பரிதாபங்கள்!

Spread the love

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. ‘இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா…’ என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஏன் சார் டென்சன் ஆகுறிங்க…உடம்புக்கு ஆகாது! ஜெயிக்கிறோமா தோக்குறோமாலாம் இல்ல தோக்குறோம் அவ்வளவுதான் என்கிற முடிவோடு ஆடி ராஜஸ்தானிடம் சென்னை அணி தோற்றதைப் போல இருக்கிறது.

RR vs CSK
RR vs CSK

‘நாங்க காயம்பட்ட சிங்கமா வரோம்…’ எனக் கேப்டன் ருத்துராஜ் சீசனுக்கு முன்பாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். கேப்டன் உத்வேகமாகப் பேசினாலும் ‘காயத்தோடலாம் ஆட முடியாதுய்யா’ எனத் தோனி, ப்ரெவிஸ் உட்பட பல முக்கியமான சிங்கங்கள் நேற்றைய போட்டியில் ஆப்செண்ட்.

தோனி ஆடவில்லை என்றவுடன் அவரின் ரசிகர்கள் டாஸூக்கு முன்பே ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர்.

‘தோனி காயத்தால் ஆடாமல் இருந்த 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும்தான் சென்னை இதுவரை வென்றிருக்கிறது. இதுதான் தோனி. இப்போதாவது தோனியின் முக்கியத்துவம் புரிகிறதா?’ என மாஸ் பிஜிஎம்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.

தோனி ரசிகர்களின் ரகளையில், ‘இவனுக நிஜமாவே டீம் ஜெயிக்குறதுக்குத்தான் சப்போர்ட் பண்றானுகளா…’ என ருத்துராஜே கொஞ்சம் குழம்பிப் போயிருப்பார்.

Ruturaj
Ruturaj

‘போன சீசன்ல எல்லா மேட்ச்சும் இறங்கி பெரியவர் உருட்டுன உருட்டையெல்லாம் மறந்துட்டானுக போல…’ எனக் கம்பீர் ரசிகர் போட்ட கமெண்டை மட்டும் தோனி ரசிகர்கள் டெலீட் செய்துவிட்டு கமுக்கமாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

டாஸில் ருத்துராஜ் கெய்க்வாட், ‘We’re going with ‘7’ Batters’ என நமட்டு சிரிப்புடன் கூறினார். தோனி ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். ஒருவேளை தப்பித் தவறி ஜெயித்துவிட்டால் கூட ‘Thala For a Reason’ எனப் போஸ்டர் அடிக்க அப்போதே தயாராகிவிட்டனர்.

எதிர்ப்பக்கத்தில் ரியான் பராக் கேப்டன். சும்மாவே ஆடுவார். இப்போது முழுநேர கேப்டனாக ப்ரமோட் வேறு ஆகிவிட்டார்! சொல்லவா வேணும். முதல் பென்ச் ஸ்டூடண்ட், கடைசி பென்ச் ஸ்டூடண்ட், காலேஜ் ப்யூன், டிபார்ட்மெண்ட் HOD என எல்லாரின் அட்டிடியூடிலும் ஒரு ஸ்பூன் அள்ளிப் போட்ட அட்டிடியூடோடு இருந்தார்.

Samson
Samson

இந்தப் போட்டியின் இன்னொரு முக்கியமான ஹைலைட் ஜடேஜாவும் சாம்சனும். ஜடேஜா கம்பேக் கொடுப்பதற்காக ஹேர்கட் பண்ணிக் கொண்டு Rugged Look இல் இருந்தார். சாம்சன் வேர்ல்ட் கப் ஹேங் ஓவரோடு வந்தார். இருவரில் ஜெயித்தது ஜடேஜாதான். சிவம் துபேவுக்கு எதிராகவெல்லாம் ‘முடிஞ்சா அடிச்சு பாரு’ என வீசி விக்கெட் எடுத்தார். சர்பராஸ் கானையும் வெளியேற்றியிருந்தார். சாம்சனுக்குத்தான் ராஜஸ்தானுக்கு எதிராக அடிக்க மனமே வரவில்லை.

‘தர்மத்தின் தலைவன்’ பிரபுவைப் போல ஓங்கிய கையை… அப்படி காற்றிலேயே ஓங்கியபடியே நிப்பாட்டி பர்கரின் பந்தில் போல்டாகி வெளியேறியிருந்தார். ருத்துராஜி வியூகத்தையெல்லாம் சமீபமாகப் புரிந்துகொள்ளவே முடியவே இல்லை.

கடந்த சீசனில் ஆடினால் நம்பர் 3 இல்தான் ஆடுவேன் எனத் தனக்கு ஒத்தே வராத இடத்தில் ஆடி கடுப்பேற்றினார். இந்த முறை செய்த தவறைத் திருத்திக் கொண்டு ஓப்பனிங் வந்துவிட்டார். ஆனால், ஆயுஸ் மாத்ரேவை நம்பர் 3 க்கு இறக்கிவிட்டார்.

‘என்னய்யா டீலிங் இது?’ அடுத்தப் போட்டியில் ஆயுஸை ஓப்பனிங் இறக்கிவிட்டு ருத்துராஜ் நம்பர் 3 க்கு வருவார். அப்படி மியூசிக்கல் சேர் மட்டும் ஆடினால் சென்னை ரசிகர்கள் இந்தச் சீசனையும் சாமிக்கு விட்டுவிடலாம்.

Jadeja
Jadeja

6, 6, 0, 2, 17, 18 திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய சீட் எண்ணிக்கையை போல இருக்கும் இதுதான் சென்னை வீரர்கள் எடுத்த ரன். ஜேமி ஓவர்ட்டன் மட்டும்தான் கொஞ்சம் காப்பாற்றினார். நின்று ஆடி 43 ரன்களை அடித்தார். அவரால்தான் 100 ரன்களையாவது சென்னை அணி தொட்டது.

ராஜஸ்தானுக்கு டார்கெட் 128. ‘புல்லட் நீங்க இறக்குனா மட்டும்தான் இறங்குமா… எங்க கிட்டயும் முரட்டு பௌலர்ஸ் இருக்காங்க’ எனச் சென்னை ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு ராஜஸ்தானின் இன்னிங்ஸைப் பார்த்தனர். ராஜஸ்தான் அணி என்ன கோவத்தில் இருந்ததோ தெரியவில்லை, ‘சின்னப் பையன்லாம் எகிறி எகிறி அடிக்கிறான்’ மோடில் ஜெய்ஸ்வாலும் சூர்யவன்ஷியும் 10 ஓவருக்குள் மேட்ச்சை முடிக்கும் எண்ணத்தோடு ஆடினர்.

ஜெய்ஸ்வால்லை கம்போஜ் வீழ்த்தினாலும் சூர்யவன்ஷி Annual Day இல் எக்குத்தப்பாக ஆடும் சிறுவனைப் போல கன்னாபின்னாவென ஆடி போட்டியை முடித்துக் கொடுத்தார்.

12.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி.

இப்போதெல்லாம் சென்னை ரசிகர்களுக்கு சென்னை அணி தோற்பதிலெல்லாம் பிரச்னை இல்லை. அது பழகிவிட்டது. ’10 அடி வாங்கினால் ஒரு அடியாவது திருப்பி அடிங்களேன் சார்…வெளியே தலைகாட்ட முடியல. இந்த ஆர்.சி.பி பேன்ஸ்லாம் கலாய்க்குறாங்க!’ என்பதுதான் பிரச்னையே.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

ஆனால், தோனி ரசிகர்களுக்கு வேறு ஒரு பிரச்னை. நேற்றைய போட்டியில் மட்டும் தோனி ஆடியிருந்தால் போட்டி முடிந்தவுடன் சூர்யவன்ஷி எப்படியும் தோனி காலில் விழுந்திருப்பார். அதை வைத்து ‘Thala For a Reason’ என ஆறுதல்பட்டிருக்கலாம். பச்…இப்போது அந்த வாய்ப்பும் மிஸ்ஸிங்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *