Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! – பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

Spread the love

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.

பார்க்கிங்
பார்க்கிங்

அடுத்ததாக இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடிப்பில் – கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தினை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் ‘பார்க்கிங் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டுகளும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. என்னையும் என் படக்குழுவினரையும் ஆசீர்வதித்து வரும் இறைவனுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினி - கமல்
ரஜினி – கமல்

எங்கள் படத்தை அன்புடனும், ஆதரவுடனும் அணைத்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பு தான் எங்களின் உலகம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

இவரின் இந்தப் பதிவிற்கு கீழ் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் ‘தலைவர் (ரஜினி 173 படம்) அப்டேட் சொல்லுங்க?’ என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *