விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார். தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி முடிக்கப்படவில்லை. மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை.

கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார். தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ, வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும்.