சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் 1947-ல் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி

16
Spread the love

1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தேசியப் பொக்கிஷமாக உள்ளது.

முதல் தேசிய கொடி

11

நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா வருகிற 15&ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.
1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடிகளில் ஒன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தேசியப் பொக்கிஷமாக உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

எஞ்சியிருக்கும் ஒரே கொடி

12 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட இந்த தேசியக் கொடி 1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் கொடிகளில் ஒன்றாகும். 1947-ம் ஆண்டில் ஏற்றப்பட்ட கொடிகளில் எஞ்சியிருக்கும் ஒரே கொடியும் இதுவாகும்.

15
சுதந்திரத்தை அடைய இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த போராட்டத்தின் சாட்சியமாக தேசியக் கொடி உள்ளது. இது தூய பட்டினால் ஆனது. சுமார் 3.50 மீட்டர் நீளமும் 2.40 மீட்டர் அகலமும் கொண்டது.

1947 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சுதந்திரக் காட்சியகம் இந்தியக் கொடியின் பரிணாம வளர்ச்சியையும், புகழ்பெற்ற மூவண்ணக்கொடியின் பின்னணியில் உள்ள கதைகளையும் காட்சிப்படுத்துகிறது.

14

13

புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்

நவீன நகரமான “சென்னை” புனித ஜார்ஜ் கோட்டை, பிரிட்டிஷ் குடியேற்றத்திலிருந்தும், கோட்டையைச் சுற்றியுள்ள பல பூர்வீக கிராமங்கள், ஐரோப்பிய குடியேற்றங்களை மெட்ராஸ் (சென்னை) நகரத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட அடுத்தடுத்த விரிவாக்கத்திலிருந்து எழுந்தது.

12

புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் 1948-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. கோட்டையில் பரவலாக இருந்த ஆங்கிலேய மன்னர்களின் நினைவுச் சின்னங்களை வைப்பதற்காக இந்தக் கட்டிடத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் யோசனை 1946-ம் ஆண்டில் பழைய மெட்ராஸ் காவலர் படையைச் சேர்ந்த கர்னல் டி எம் ரீட் என்பவரால் முன்வைக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தின் வரவேற்பு பகுதியில், கோட்டையின் பரிணாம வளர்ச்சி, 1640 முதல் அதன் கட்டுமானத்தைக் காட்டும் வரைபடம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த 3500&க்கும் அதிகமான கலைப்பொருட்கள் இப்போதும் உள்ளன. சிறப்புமிக்க இவை, ஒன்பது காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மாதுளை, மாம்பழம் மீதான கட்டுப்பாடுகளை நீக்க நியூசிலாந்து ஒப்புதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *