‘மழை பிடிக்காத மனிதன்’ பட பிரச்சினை முடிந்துவிட்டது- விஜய் ஆண்டனி

Mazhai Pidikatha Manithan Movie Stills Ok
Spread the love

சினிமா:

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

Mazhai Pidikatha Manithan Movie Stills Ok

சர்ச்சை

மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனி கேரக்டரின் பின்கதை அதில் முன்கூட்டியே சொல்லப்படுவதாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டினார். மேலும் இந்த காட்சி தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Mazhai Pidikatha Manithan Movie Stills 4 1024x683

அது நான் இல்லை

இது தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது ‘சலீம் 2’ இல்லை. என விளக்கம் அளித்திருந்தார்.

இதேபோல் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்,

Actor Vijay Antony

பிரச்சினை முடிந்துவிட்டது

“மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குநரும் கலந்து பேசி, அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர். இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
இதனால் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்பட பிரச்சினை முடிவுக்கு வந்து உள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா- தொடரும் பதட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *