உணவு டெலிவரி ஊழியர் போல் வந்த கொலையாளிகள்

Dinamani2f2024 072f4d45cefd E40e 4202 B3ab 7e4c84876c4e2fbsp20leader.jpg
Spread the love

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

உணவு டெலிவரி ஊழியர் போல்

Amstrang

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொலை கும்பலை «பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொலையாளிகள் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மோட்டார் சைக்கிளில் வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் அருகே பிரியாணி கடை உள்ளது. அந்த கடையில் எப்போது உணவு டெலிவரிக்கு வரும் ஊழியர்கள் அங்கு கும்பலாக நிற்பது வழக்கம். அதே போல் கொலையாளிகளும் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் நின்று நோட்டமிட்டு உள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலில் அங்கிருந்த மேலும் 2 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்ட தாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையால் பதட்டமான நிலை நிலவுகிறது.

Edappdai
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர்  மாயாவதி மற்றும்  கட்சி தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?.

கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிபடுகொலை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *