ஜனாதிபதி திரபுபதி முர்மு தனது பதவிக்காலத்தின் 2 ஆண்டை நிறைவு செய்து உள்ளார். இந்த நிலையில் அவர், கடந்த காலத்தில் ஆசிரியராக இருந்தை நினைவுபடுத்தும் வகையில், ஆசிரியர் பணியை இன்று மேற்கொண்டார்.
ஜனாதிபதி திரபுபதி முர்மு
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9 ம் வகுப்பு மாணவர்களுடன் உரையாடிய அவர், இயற்கைவளங்கள் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த பாடங்களை கற்பித்தார்.
கடந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், தாவரங்கள் மற்றும் விலங்குகளை பராமரித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்களும் உற்சாகத்துடன் பதிலளித்தனர். மாணவர்களுக்கு ஜனாதிபதி திரபுபதி முர்மு அவர் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிவன் கோயில் திறப்பு விழா
புனரமைக்கப்பட்ட சிவன் கோயில் திறப்பு விழா, பிரணாப் முகர்ஜி பொது நூலகத்திற்குச் சென்று, அங்கு மாணவர்களுடன் உரையாடினார். குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தின் பழைய மற்றும் அரிய புத்தகங்களின் டிஜிட்டல் பதிப்புகளை ஜனாதிபதி திரபுபதி முர்மு பார்வையிட்டார்.
மேலும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் திறன் இந்தியா மையம் தொடங்கி வைக்கப்பட்டது.டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் அரங்கம் திறப்பு விழா, செயற்கை இழை மற்றும் புல்தரை டென்னிஸ் ஆடுகளங்கள் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வளர்ச்சிக்கு
குடியரசுத் தலைவர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் பணிகளைப் பாராட்டி பேசும்போது, இது வசதி, வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வளர்ச்சிக்கு நாம் எப்போதும் பங்களிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.