நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் காதல் கதையில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர்.
படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்க உள்ளதாகத் தகவல்.
கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, படத்துக்கு ‘பாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் அதிதி ஷங்கருடன் நடித்துவந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதன புகைப்படங்களும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
That’s a Wrap @iam_arjundas & @AditiShankarofl starrer #MillionDollarProdNo4 shoot has been successfully wrapped
Get ready for an incredible experience ✨
Directed by @isrikanthmv@Foxy_here03 @Yuvrajganesan @MillionOffl pic.twitter.com/9EmLFZ8gX4
— Yuvraaj (@proyuvraaj) September 11, 2024