மார்க்கண்டேயன் இந்த விவகாரம் குறித்து, “‘டெல்லியில சட்டம் படிச்சிட்டிருக்கான் என் பையன். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீர்ப்பளித்த அடுத்து சில தினங்களில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டிருக்கார் மாண்பமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
அந்த நிகழ்ச்சியில் அரங்கத்தில் குத்துவிளக்கேற்றச் சொல்ல, ‘மலையிலதான் ஏத்த முடியல, இங்கவாச்சும் ஏத்துவோம்’ எனப் பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சை செய்தித்தாள்களில் பார்த்துட்டு, ‘ஒரு நீதிபதி இப்படி எப்படி பேசலாம்’னு எங்கிட்டயே கேட்டான். அவனை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருக்கு இந்தப் பேச்சு.

சி.எம். நிகழ்ச்சி அன்னைக்கு சென்னையில் இருந்து ஊருக்கு வர்றதாதான் சொன்னான். அதுக்குதான் ஏர்போர்ட் வந்தான். இதுக்கிடையில மதுரையில இந்த விவகாரம் தொடர்பான முதல்வரின் பேச்சும் அவனை ரொம்பவே ஈர்த்திருக்கு.
இந்தப் பின்னணியில முதல்வர் கிளம்பறதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் எழுப்பியிருக்கான். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கல. பொதுவெளியில ஒரு நீதிபதியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உட்பட்டவைதானே. அதனால அவனுடைய இந்த செயலை நான் ஆதரிக்கறேன்’ என்றார் இவர். அக்ஷயிடம் இதுகுறித்துப் பேசினோம்,