திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் ரயில். இப்ப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவான பிருந்தா இணையத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில், த்ரிஷா காவல் துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.
நடிகைகள் ஊர்வசி மற்றும் பார்வதி நடித்த உள்ளொழுக்கு மலையாளத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வந்துள்ளது. டெனிஸ் வில்லுனுவேவின் டியூன்பாகம்&2 திரைப்படம் ஜியோ சினிமாவில் காணலாம்.
பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூன்றாம் மனிதன் திரைப்படம் சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி இருக்கிறது.