TNPSC குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்

12 1024x1024
Spread the love

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால(டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.

Tnpsc

குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம்

குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 ம் தேதியும்,

குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதியும், குரூப் 2, 2A தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், குரூப் -2, 2A தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Untitled

தேர்வர்களின் நலன் கருதி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தர்வுக்கால அட்டவணை 24.04.2024 அன்று வெளியிடும்போது, தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II மற்றும் தேர்வு-II Aக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தனித்தனியே அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II ன் முதன்மை எழுத்துத் தேர்விற்கானபாடத்திட்டமும், முதன்மைத்தேர்விற்கான புதிய மாற்றியமைக்கப்பட்ட
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIA-ன் பாடத்திட்டமும் https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதளபக்கத்திலும், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *