TNPSC குளறுபடிகள்; காரணம் என்ன?- கல்வியாளர் விளக்கம் |tnpsc-administration-irregularities-continue-what-is-the-reason-educationist-explains

Spread the love

கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் நீட் குளறுபடிகள்

“இந்த மாதிரி தேர்வு நேரத்தில் எழக்கூடிய குளறுபடிகள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நிர்வாகத்தில் மட்டும் இல்லை.

கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் அளவுக்கு நீட் மாதிரியான தேர்வுகளை நடத்தும் நிர்வாகத்திலும் இருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் குறித்து பேசும் தலைவர்கள் இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.

நேற்று நடந்த சம்பவத்தில் நிர்வாகத் தவறும் இருக்கிறது, தனிமனித தவறும் இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்?

ஒவ்வொரு நிலையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டிருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்க முடியும். 

எதெல்லாம் தேர்வு மையம்? அந்தத் தேர்வு மையத்தை முன்கூட்டியே பார்வையிடுபவர்கள் யார்?

உண்மையிலேயே அந்தத் தேர்வு மையத்தைப் பார்வையிட்டார்களா? எந்தெந்தத் தேர்வு மையங்களுக்கு எந்தெந்தக் கேள்வித்தாள்களை அனுப்ப வேண்டும்?

அதற்கு யார் பொறுப்பு? அந்தப் பொறுப்பில் இருப்பவர்களைக் கண்காணித்தது யார்? என தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கண்காணித்திருக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *