Last Updated:
Top 10 Tamil News | உள்ளூர் முதல் உலகம் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. வெள்ளத்தால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்.
- ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்த வாய்ப்பு.
- பொங்கல் முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்புபவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
- குரூப் 2 மற்றும் 2 ஏவில் மேலும் 625 பணியிடங்கள் சேர்ப்பு. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 270ஆக அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
- மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியது மத்திய அரசு. கோவையை விட மக்கள்தொகை குறைவாக உள்ள ஆக்ரா, புனே போன்ற நகரங்களுக்கு அனுமதி அளித்ததால் அதிர்ச்சி.
- கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்ல வேண்டும். சூலூர் உள்ளிட்ட 3 தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
- சபரிமலையில் மலை ஏறும்போது கேரள பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால் ஐயப்பனை வழிபட 10 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.
- பிகாரில் புதிய முதலமைச்சரை தேர்வுசெய்ய இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டம். நாளை பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்.
- டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து அல் ஃபலா பல்கலைக் கழக நிறுவனர் கைது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை.
- தனுஷ் மற்றும் அவரது மேலாளர் குறித்து தவறாக பேசவில்லை என டிவி சீரியல் நடிகை மான்யா மறுப்பு. தனுஷின் மேலாளர் என்ற பெயரில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக ஆபாசமாக பேசியவரைத்தான் கண்டுபிடிக்க கூறியதாக விளக்கம்.
November 19, 2025 7:33 AM IST
