தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக வரும் 19 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06168) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2015-ல் காவலரைத் தாக்கிய நபருக்கு 1 ஆண்டு சிறை!
One Way Superfast Special Train between Tuticorin – Tambaram to clear extra rush of passengers during pongal festival
Advance Reservation for the above Festival Special Train will open at 08.00 hrs on 15.01.2025 (Tomorrow)#SouthernRailway #Pongal #Pongal2025 pic.twitter.com/gzJUlgASoY
— Southern Railway (@GMSRailway) January 14, 2025
அதே நாளில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (06062) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.