`புர்ஜ் கலீபா சர்ப்ரைஸ் அதுக்குதான்!’
உலகின் உயரமான கட்டடமான துபாயில் இருக்கும் புர்ஜ் கலீபாவில் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாடி வந்திருக்கிறார் நடிகை தீபா.
‘ஈரான் அங்கெல்லாம் அட்டாக் பண்ணிட்டிருக்காங்களே, இது எப்ப நடந்தது’ என தீபாவிடமே கேட்டோம்.
”மகனுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிருக்கு. இது முக்கியமான ஒரு பருவமில்லையா, அதனால நல்ல ஒரு சர்ப்ரைஸ் பரிசு தரலாம்னு நினைச்சேன். அவன் இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் போனதில்லை. அதனால துபாய் போகலாம்னு முடிவு செய்தோம்.
நல்ல வேளையா பிறந்த நாள் போன மாசம் வந்தது. அமெரிக்க ஈரான் போர் அப்ப தொடங்கல. ஏர்போர்ட் போய் ஏன் துபாய் போற இறங்குகிற வரைக்குமே அவனுக்கு பர்த் டே செலிபிரேஷனுக்குதான் போறோம்னு தெரியாது.
நடிகர் நடிகைகள் வழக்கமா கலை நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகள் போவாங்க இல்லையா, அப்படி ஏதோவோரு நிகழ்ச்சிக்குதான் போறோம்னு நினைச்சிருக்கான்.
அங்க போய் கேக் வெட்டறப்பதான் இந்த ட்ரிப்பே அவனுக்காகத்தான்னு சொன்னேன். சந்தோஷத்தால் அவனுக்கு சில நிமிடங்கள் வார்த்தைகளே வரலை.

எதுக்கு இந்த ட்ரிப்னா, பிள்ளைகள் 18 வயசை கிராஸ் செய்துட்டாங்கன்னா பேரண்ட்ஸ்கிட்ட இருந்து அதுவும் குறிப்பா பையன்கள்னா அம்மாகிட்ட இருந்து விலகத் தொடங்கி, அம்மாவிடம் எதையும் ஷேர் செய்ய தயங்குவாங்கனு ஒரு கருத்து இங்க இருக்கில்லையா, அந்த மாதிரில்லாம் எதுவுமில்ல, இதுக்குப் பிறகும் அம்மா ஒரு ஃப்ரண்டா தான்.. எந்த விஷயத்தையும் அவங்ககிட்ட ஷேர் பண்ணலாம்’னு உணர்த்தவே இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணினேன். ஒரு மொமென்ட்டாவும் அது இருந்தா அவனுக்கு எப்பவும் மறக்காது இல்லையா” என்கிறார் இவர்.
கை மாறிய கல்பனா ஹவுஸ்!
சென்னையில் கடற்கரை சாலையில் இருக்கும் கல்பனா ஹவுஸைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவரும் நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் குடும்பத்துக்குச் சொந்தமான இந்த பங்களா சினிமா, சீரியல்களின் ஷூட்டிங்கால் எந்த நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். பெரிய நடிகர்கள் மற்றும் ஹிட் படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்திருக்கிறது.
தற்போதைய செய்தி என்னவெனில் இந்த பங்களா கை மாறி விட்டது என்பதுதான். சுஜாதா விஜயகுமார் குடும்பத்திடமிருந்து ஏ.சி.எஸ் குழுமம் இந்த பங்களாவை வாங்கி விட்டார்களாம். தொடர்ந்து இங்கு ஷூட்டிங் நடக்குமா அல்லது நட்சத்திர ஓட்டல் ஏதாவது வருமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும்.
கணவர் கொடுமை, புகாரளிக்க கிளம்பும் மனைவி?
டிவிக்களில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களில்தான் அடுத்த நாள் சீரியலைப் பார்க்க வைப்பதற்காக ஏதாவது ட்விஸ்டுகளை வைப்பார்கள்.. ஆனால் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரது வாழ்க்கையிலும் ஏதாவதொரு அதிரடி அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது.
பல சீரியல்களில் நடித்தவர் அந்த மூத்த நடிகர். தமிழ், மலையாள சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட்டு டிவி பக்கம் வந்தவர். முதலில் ஒரு நடிகையை திருமணம் செய்தார். அந்த திருமண வாழ்க்கைய்லிருந்து முறைப்படி வெளியேறியவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்தார். அந்த திருமண பந்தமும் தொடரவில்லை. மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்தார்.
தற்போது மூன்றாவது மனைவியுடனும் பிரச்னை என்கிறார்கள்.
வீட்டுக்குள் நடந்து வந்த சண்டை இப்போது இன்டஸ்ட்ரியில் பரவலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. போலீஸ், மீடியா என பிரச்னையை வெளியில் பேசத் தயாராகி விட்டாராம் அவர் மனைவி!