இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா, உடனே விஜய் சந்திப்பு, இன்றைக்கு தவெகவில் இணைந்தது என படபடவென காய்களை நகர்த்தியிருக்கிறார் செங்கோட்டையன்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

“எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் சரியில்லை, அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை, திமுக – அதிமுக இரண்டும் ஒன்றுதான்” என்று கூறி தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வரவேண்டுமென தவெகவில் இணைந்திருப்பதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது குறித்துப் பேசியிருக்கும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஒரு பெரும் வரலாறு ஆரம்பித்ததில் பங்காற்றியவர். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் வரலாறு தொடங்கியபோது உறுதுணையாக இருந்தார்.