காலை 9.30 மணியளவில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் ஆஜராகவிட்டனர்.
செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். முன்னதாக நேற்று விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு ஆதவ் காரில்தான் வந்திருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று செங்கோட்டையன் பனையூர் அலுவலகம் வரும்போது அங்கு, சிறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமாகவும் தள்ளுமுள்ளுவாகவும் மாறியது.
செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசி தாக்க முற்பட்ட பாதுகாவலரை மன்னிப்பு கேட்க சொல்லி செய்தியாளர்கள் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.