TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' – பனையூரில் நாஞ்சில் சம்பத்

Spread the love

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், ‘தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன்.

யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்’ என்றார்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *