TVK: விஜய்யின் தவெக இணைந்த செங்கோட்டையன்; பரபர அப்டேட்ஸ்| TVK: Sengottaiyan, who was expelled from AIADMK and joined Vijay’s Thaveka; Parapara Updates

Spread the love

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.

இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாகத் தகவல்கள் கசிந்தன.

எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார்.

விஜய் வருகை

விஜய் வருகை

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் காலையிலேயே ஆஜராகவிட்டிருந்தனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார்.

வழக்கமாக, நிர்வாகிகள் கூட்டத்துக்கும் இணைப்பு விழாக்களுக்கும் அனைவரும் வந்த பிறகு கடைசியாகத்தான் விஜய் அலுவலகத்துக்கு வருவார். ஆனால், செங்கோட்டையன் சூப்பர் சீனியர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக விஜய் செங்கோட்டையனுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *