கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அங்கமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று மத்தியப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த விசாரணையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் எனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்’ என விஜய் கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எங்களுடைய தலைவருக்கு விட்னஸ் சமன் வந்திருந்தது. அதன் அடிப்படையில எங்களுடைய தலைவர் நேற்று டெல்லியில் சி.பி.ஐ அலவலத்தில் ஆஜராகி அவர்களுக்குத் தேவையான விளக்கத்தை அளித்தார்.