செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.