பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர விஜய் 5 கார்கள், 1 இருசக்கர வாகனம் வைத்திருப்பதாகவும் விவரம் வெளியாகிறது.. அதன்படி
விஜய் வைத்திருக்கும் கார்கள்
BMW 530 (2020) — ரூ.80,54,119
Toyota Lexus 350 (2024) — ரூ.3,01,57,881
Toyota Vellfire (2024) — ரூ.1,63,45,118
BMW I7 (2024) — ரூ.2,00,64,296
Maruti Swift (2024) — ரூ.5,35,000
TVS XL Super (2025) — ரூ.67,400

அசையாச் சொத்துகள் (மொத்தம்: ரூ.82,81,93,010):
விள்பட்டி கிராமம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் நிலங்கள் மற்றும் வணிகக் கட்டடங்கள்.
கல்வித் தகுதி:
B.Sc இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992
தொழில்:
சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், விதியா சாரிடபுள் டிரஸ்ட்
குற்றவியல் வழக்குகள்: இல்லை
வெள்ளி பொருட்கள் ரூ.15,00,000 (883 கிராம்)
தங்கம் 3,132 கிராம் — ரூ.4,07,16,000
வைரம் 134.91 கேரட் — ரூ.1,00,00,000