U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்| Suryavanshi delivers a stunning performances in u19 worldcup

Spread the love

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.

யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி – ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது.

இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வைபவ் சூர்யவன்ஷி – ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது.

இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்து சாதனைப் படைத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *