UAE: $500 மில்லியன் கிரிப்டோ மோசடி செய்த ரஷ்ய தம்பதி; பாலைவனத்தில் சடலமாக மீட்பு – நடந்தது என்ன? | Crypto Scam Turns Deadly: Russian Couple Lured, Kidnapped and Killed Near UAE–Oman Border

Spread the love

நோவாக் மற்றும் அன்னாவைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், ரஷ்யாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ரஷ்ய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அமீரக சட்ட அமலாக்கத்துறையினர் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் 4ஆம் தேதி, ஹட்டா மற்றும் ஓமன் இடையே அவர்களது கடைசி செல்போன் சிக்னல் பதிவாகியிருப்பதையும், பின்னர் அது தானாக துண்டிக்கப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

காவல்துறையினர், இந்த தம்பதி போலியான காரணம் சொல்லி ஒரு வாடகை வில்லாவுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே கிரிப்டோ வாலட்டுக்கான கடவுச்சொல்லைக் கூற மிரட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

மோசடி செய்யப்பட்ட பணத்தை அடைய முடியாத கடத்தல்காரர்கள் கொலை செய்து, உடலை துண்டுகளாக்கி, தடயத்தை அழிக்கும் ரசாயனங்களுடன் தடிமனான பிளாஸ்டிக் பைகளில் போட்டு பாலைவனத்தில் புதைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளே ஈடுபட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைக்காக ரஷ்ய மற்றும் ஓமன் அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். உடல்களை ரஷ்யாவுக்கு எடுத்துவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *