என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் வரவேண்டாம்-உதயநிதி

Udhayanidhi2
Spread the love

சென்னை:
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் சென்னைக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வரவேண்டாம் என்று தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டு உள்ளார். இது தொடர்பாக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Gyoom7uaqaa8myi

வரவேண்டாம்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது.

அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன். எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அதிரடியால் டி20 ஆக மாறிய டெஸ்ட் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *