UK doctor who questioned Narendra Modi on Facebook arrested at Mumbai airport-நரேந்திர மோடி குறித்து பேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இங்கிலாந்து டாக்டர் மும்பை விமானநிலையத்தில் கைது

Spread the love

இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சங்க்ராம் பாட்டீல் யூடியூப்பராகவும் இருக்கிறார். அதிக அளவில் யூடியூப்பிலும், பேஸ்புக்கிலும் வீடியோ பகிர்ந்துள்ளார்.

அவர் கடந்த மாதம் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குறித்த உலகளாவிய விவாதங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அவரது ஆதரவாளர்களிடமிருந்தும், ஆளும் தரப்பிடமிருந்தும் விளக்கத்தைக் கோரியிருந்தார்.

இருப்பினும், டாக்டர் சங்க்ராம் பாட்டீலுக்கு தெரியாமலேயே இது குறித்து நரேந்திர மோடியின் ஆதரவாளர் ஒருவர் கடந்த மாதம் 18ம் தேதி சங்க்ராம் பாட்டீலுக்கு எதிராக போலீஸில் புகார் செய்து இருந்தார். அதன் அடிப்படையில் டாக்டருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விமான நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது.

இங்கிலாந்தில் இருந்து 3 அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை டாக்டர் தனது பெற்றோரை பார்க்க இந்தியா வருவதுண்டு.

விமான நிலையத்தில் கைது

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் இருந்து தனது மனைவியோடு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தவுடன் அவரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் உங்களுக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், போலீஸார் வந்து விசாரித்து உங்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர்.

இது குறித்து சங்க்ராம் பாட்டீல் கூறுகையில், “‘என்னை விமான நிலையத்தில் 5 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். அதன் பிறகு லோயர் பரேல் குற்றப்பிரிவு போலீஸார் வந்து என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர். என்னிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு என்னை விடுவித்தனர். மொத்தம் 15 மணி நேரம் என்னை பிடித்து வைத்திருந்தனர். எனக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுத்து இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். இது குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் வந்திருப்பேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *