Ukraine War: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருமா அமெரிக்கா? – பிரான்ஸ் அதிபரின் சந்தேகம் ஏன்?| Macron Denies Rift as Leaked Call Suggests U.S. May ‘Betray’ Ukraine in Peace Deal

Spread the love

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது.

அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன்.

புதின் - ட்ரம்ப்

புதின் – ட்ரம்ப்

Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்?

ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *