அமர்நாத் புனித யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தற்போது இது சரிசெய்யப்பட்டு உள்ளது.
அமர்நாத் யாத்திரையில் உள்ள பக்தர்களுக்கு தடையின்றி செல்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொலைத்தொடர்பு அடிப்படைக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைத் தொலைத் தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
தடையின்றி செல்போன் சிக்னல்
யாத்திரைப் பாதை முழுவதும் தொடர்ச்சியாக செல்பேசி இணைப்பு கிடைப்பதற்காக, ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை வழங்கும் பெருநிறுவனங்களுடன் இணைந்து அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் பதவிக்கு மீண்டும் சிக்கலா? ஹேமந்த் சோரனுக்கு ஷாக் கொடுத்த ED.. ஜாமீனை எதிர்த்து அப்பீல்
இணைப்பு வசதிகள்
கடந்த ஆண்டு இந்த யாத்திரை வழித்தடங்களில் 51 இடங்களில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ இணைப்பு வசதிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இத்தகைய இணைப்பு வசதிகள் கொண்ட இடங்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு ஏற்கனவே சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வந்த இடங்கள் தவிர புதிதாக சில இடங்களிலும் சிம் விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.