UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை | UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார்.

ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற ராம் சிங் மகன் நிதின், மினி வேன் ஒன்றில் மிகப்பெரிய இரும்பு டிரங்க் பெட்டியை ஏற்றிச்சென்றார். ஆனால் அந்த டிரங்க் பெட்டியைப் பார்த்தபோது வேன் டிரைவருக்கு அதற்குள் இருக்கும் பொருட்கள் மீது சந்தேகம் வந்தது.

நிதின் சொன்ன இடத்தில் டிரங்க் பெட்டியை இறக்கி வைத்துவிட்டு இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து அந்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் எரிந்து போன மனித எலும்புகள், கரிக்கட்டைகள் போன்றவை இருந்தன.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் நிதினின் தந்தை ராம் சிங் என்பவர்தான் அந்தப் பெட்டியை வேறு இடத்திற்கு மாற்றும்படி தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இரண்டாவது மனைவியின் மகன்தான் நிதின். போலீஸாரின் விசாரணையில் ராம் சிங் திருமணம் செய்யாமல் பிரீத்தி (35) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

இதில் பிரீத்தி ஏற்கனவே ராம் சிங்கிடமிருந்து கணிசமான அளவு பணத்தை வாங்கியுள்ளார். அதோடு மேற்கொண்டு பணம் கொடுக்கும்படி கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் அவரது கொடுமை தாங்க முடியாமல் பிரீத்தியை ராம் சிங் படுகொலை செய்துள்ளார். இதையடுத்து உடலை மிகப் பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து அடைத்து அதற்கு தீ வைத்துள்ளார். அஸ்தியை சாக்குமூட்டையில் கட்டி அங்குள்ள ஆற்றில் போட்டுள்ளார்.

பிரீத்தியின் எரியாத எலும்புகள் மற்றும் அவரது பொருட்களை டிரங்க் பெட்டியில் அடைத்து தனது மகனை அழைத்து அதனை இரண்டாவது மனைவி கீதாவின் வீட்டிற்குக் கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் டிரங்க் பெட்டியை வேனில் ஏற்றிய நபர் சந்தேகப்பட்டு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் நிதினைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ராம் சிங் மனைவி கீதா கூறுகையில், “‘எனது கணவர் பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறி இருக்கிறார்” என்றார். தற்போது ராம் சிங் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *