ரொக்க பணபரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆப்கள் மூலம் UPI transaction என்பது தற்போது நடந்து வருகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் பயன்பாடு என்பது படிபடியாக குறைந்து வருகிறது.
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், அதற்கேற்ப முறைகேடுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆன்லைனில் பணமோசடி என்பதும் தினந்தோறும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆன்லைன் பணமோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அதனை தடுப்பது கடினமாக வருகிறது.
இதன் காரணமாக ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க RBI இந்த பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் UPI சேவையில் ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது
ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை UPI மூலம் அனுப்பும்போது, அந்தப் பணம் பெறுநருக்குச் செல்ல 1 மணிநேரம் தாமதமாகும். இந்த “கூலிங்-ஆஃப்” (Cooling-off) காலத்தில், தவறுதலாகவோ அல்லது மோசடியாகவோ பணம் அனுப்பப்பட்டிருப்பதை உணர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையை பயனர் ரத்து செய்ய முடியும்.
ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இனி UPI பின் (PIN) மட்டும் போதாது; கூடுதலாக OTP அல்லது Face ID/Biometric போன்ற ஒரு பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு செயலியில் அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் பார்க்க முடியும். 12 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத UPI ஐடிக்கள் தானாகவே முடக்கப்படும்.
பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாள் வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. இந்த மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களை RBI அதிகாரப்பூர்வ தளம் அல்லது NPCI இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
