Last Updated:
யுபிஐ கட்டண மாற்றம்: கூகுள் பே, போன் பே சேவைகளில் புதிய கட்டணம் வசூல்! இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
யுபிஐ கட்டண மாற்றம்: கூகுள் பே, போன் பே சேவைகளில் புதிய கட்டணம் வசூல்!கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனை செயலிகள் வழியாக மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில், கூகுள் பே இந்த சேவைகளுக்கான வசதிக்கட்டணத்தை (Convenience Fee) அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.3 கட்டணம் விதித்த கூகுள் பே, தற்போது பில் பேமென்ட்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. பரிவர்த்தனை தொகையின் மதிப்பில் 0.5% முதல் 1% வரை, ஜிஎஸ்டியுடன் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களும் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தும் பயனர்களிடமிருந்து இதே போல கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெறும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே முதலிடங்களில் உள்ளன.
யுபிஐ வளர்ச்சி மற்றும் பரிவர்த்தனை நிலவரம்கடந்த ஜனவரியில், இந்தியாவில் மொத்தமாக 16.99 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.23.48 லட்சம் கோடி.கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது இது 39% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
யுபிஐ பயன்பாட்டின் தாக்கம்யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது இந்தியாவில் ஒரு பொதுவான செயலாக மாறியுள்ளது. கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை, சிறிய வணிகர்கள் முதல் பெரிய வணிக வர்த்தகர்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால், ஃபின்-டெக் நிறுவனங்கள் தங்களது வருவாயை ஈடு செய்ய இந்த வகையான கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM போன்ற செயலிகள் மூலம் தினசரி யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதன் பயனர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயரும் நிலையில், சேவை வழங்குநர்கள் புதிய கட்டண முறைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.
February 20, 2025 10:44 PM IST
