தேர்வுக்கு தயாராகுபவர்கள் மூன்று விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும். முதலில் அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் இந்த நான்கு பாடப்பிரிவுகளிலும் உறுதியாக இருக்க வேண்டும். இந்தப் பாடப்பிரிவுகளின் அடிப்படையை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு அவர்கள் பள்ளிக்கூட புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
UPSC தேர்வு படிப்பவர்களாக இருந்தால் NCERT புத்தகங்களைப் படிக்க வேண்டும். TNPSC தேர்வு படிப்பவர்களாக இருந்தால் தமிழ்நாடு அரசின் சமச்சீர் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதில் படிக்கும்போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக தினமும் செய்திதாள் படிக்க வேண்டும். குறிப்பாக எது பயிற்சிக்கு தேவையோ அதை கட்டாயம் படிக்க வேண்டும். மூன்றாவது எந்தத் தேர்வாக இருந்தாலும் ஆப்டிடியூட் தான் முக்கியம். இது இல்லாமல் அரசாங்க தேர்வே இல்லை. அதனால் ஆப்டிடியூட் தொடர்பான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்ய வேண்டும். கல்லூரி படிக்கும் மாணவர்கள் இதை முதல் இரண்டு ஆண்டுகளில் செய்யலாம். மூன்றாவது ஆண்டில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இப்படி செய்தால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாகும்” என்றார்.