UPSC / TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? chennai-யில் இலவசப் பயிற்சி முகாம் | UPSC / TNPSC training program chennai workshop

Spread the love

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் டாக்டர். V. இராம் பிரசாத் மனோகரைத்(இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) தொடர்பு கொண்டு பேசினோம்.

“போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதலில் சுயஒழுக்கம் (Self Displine) தேவை. ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது பல விஷயங்கள் அதற்கு தடையாக இருக்கும். அந்த இடையூறுகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு சுய ஒழுக்கம் தேவை.

டாக்டர். V. இராம் பிரசாத்

டாக்டர். V. இராம் பிரசாத்

இரண்டாவது டைம் மேனேஜ்மென்ட். போட்டித் தேர்வுகளில் தயாராகும் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சரி, தேர்வுகளை எழுதும்போதும் சரி டைம் மேனேஜ்மென்ட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

மூன்றாவது…பொதுவாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் நிறைய விஷயங்களை படிப்பார்கள். எதற்காக படிக்கிறோம்? என்ன படிக்கிறோம்? என்ற ஒரு தெளிவு இல்லாமல் படிப்பார்கள். ஆனால் அதற்கான சிலபஸ் என்ன? கடந்த வருடங்களில் என்ன மாதிரியான கேள்விகள் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *