“UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் – King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இதில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்) சிறப்புரை ஆற்றயிருக்கிறார்.