UPSC/TNPSC: ‘சரியான வழிகாட்டுதலுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும்’- சத்யஶ்ரீ பூமிநாதன் | kingmakers ias academy sathyasree Boominathan about upsc tnpsc exam

Spread the love

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக நம்மிடம் பேசிய கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, “வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக 100% பார்வையற்ற திருமதி. Beno zephaine IFS அதிகாரியை உருவாக்கிய பெருமைமிக்க கோச்சிங் சென்டர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி.

UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலை பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ பட்டப்படிப்பாக எடுத்துப் படிக்கலாம்.

குறிப்பிட்ட பாடத்திட்டம்தான் படிக்க வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது தேர்ச்சி பெறுவதை எளிதாக்கும். 

சத்யஶ்ரீ பூமிநாதன்

சத்யஶ்ரீ பூமிநாதன்

தற்போது +2 முடித்த மாணவர்கள் கூட கல்லூரியில் சரியான திட்டமிடல் மூலம் முதல் முயற்சியிலேயே UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். கல்லூரியில் ஆப்ஷனல் படிப்பைத் தேர்வு செய்து படிக்கும் அதே வேளையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கக் கூடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

NCERT பாடத்திட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிப்பதன் மூலமும் தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதைக் கட்டாயப்படுத்திக் கொள்வதன் மூலமும் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற முடியும்.

தினமும் நம்மைச் சுற்றி நடக்கக் கூடிய ஒவ்வொரு நிகழ்வுகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைக் கூர்ந்து கவனிப்பது அதை அலசி ஆராயக் கூடிய திறனை வளர்த்துக்கொள்வது இந்தப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான முதன்மையான பண்புகளாகும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *