பாரீஸ்:
பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜுலை 26&ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த அனைத்து போட்டிகளும் இன்றுடன் முடிந்தன.
அமெரிக்கா முதலிடம்
இதில் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதிலிடம் பிடித்து உள்ளது. 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்கள் பெற்று உள்ளது.
சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதையில் தொழில்நுட்ப கோளாறால் நின்ற விமானம்: அதிகாரிகள் இன்று விசாரணை
2&வது இடத்தை பிடித்து இருக்கிறது. சீனா, 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 91 பதக்கங்கள் பெற்று உள்ளது. 3&வது இடத்தில் உள்ள ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்று உள்ளது.
இந்தியா 71 வது இடம்
இந்தியா ஒரு தங்கம் கூட பெறவில்லை. ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 6 பதங்கங்கள் மட்டுமே பெற்று 71 வது இடத்தை பிடித்தது.
நிறைவு விழா
இந்திய நேரப்படி நள்ளிரவு ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற்றது. இதில் 2 வெண்கலபதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் மனுபாக்கர் மற்றும் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.