UUPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; சிறப்புரை ஆற்றும் சைலேந்திர பாபு | UPSC / TNPSC: Free coaching camp in Coimbatore; Sylendra Babu deliver special speech

Spread the love

சிறப்புரை ஆற்றும் சைலேந்திர பாபு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962-ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் சி. சைலேந்திர பாபு, 1987-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.

விவசாயத் துறையில் முதுகலைப் பட்டமும், குற்றவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், தமிழகக் காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி அதன் உச்சபட்ச பதவியான காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) உயர்ந்து 2023-ல் ஓய்வு பெற்றார்.

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இவர் கடலோரப் பாதுகாப்பு, தீயணைப்புத் துறை மற்றும் இரயில்வே காவல்துறை எனப் பல பிரிவுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். குறிப்பாக, ‘மக்களுக்கான காவல்துறை’ என்ற பிம்பத்தை உருவாக்கியவர்.

அதிகாரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். தற்போதும் அந்தப் பணியைத் தொடர்ந்து வருகிறார். ‘நீங்களும் ஓர் ஐ.பி.எஸ் ஆகலாம்’ போன்ற பல புத்தகங்களின் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *