Vaa Vaathiyaar: "கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க" – 'ஏஸ்' பட இயக்குநர் குற்றச்சாட்டு

Spread the love

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

வா வாத்தியார்
வா வாத்தியார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘ஏஸ்’ போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்’ படம் `துக்ளக் தர்பார்’ போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்’ (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *