உலக ஃபேஷன் துறையில் பல வருடங்களாக சாதனை படைத்து, ‘வாலென்டினோ ரெட்’ எனும் தனிச்சின்னத்தால் புகழின் உச்சத்தை அடைந்த உலக ஃபேஷன் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி, தனது 93-வது வயதில் ரோமில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
யார் இந்த வாலென்டினோ?
இளவரசி டயானாவிலிருந்து இன்றைய இளம் ஹாலிவுட் நட்சத்திரம் சென்டயா வரை, உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு அதிகாரப்பூர்வ ஃபேஷன் டிசைனராக இருந்தவர் வாலென்டினோ. Oscars, Cannes Film Festival, Met Gala போன்ற உலக கவனத்தை ஈர்க்கும் ரெட் கார்பெட் நிகழ்வுகளில் அவர் வடிவமைத்த உடைகளின் தனித்த அழகு அதிகம் பேசியது.
தன் பெயரிலேயே உருவாக்கிய ‘Valentino Red’ என்ற அடையாள சிவப்பு நிறம், லிப்ஸ்டிக் முதல் ஆடம்பர bags வரை இன்று ஒரு கிளாசிக் ஸ்டைல் சின்னமாக தேடி வாங்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
வாலென்டினோவின் சொத்துகள் – இனி என்ன ஆகும்?
வாலென்டினோ கரவானி 1960‑இல் ரோமில் Valentino எனும் லக்ஷூரி ஃபேஷன் ஹவுஸ் தொடங்கி உலகப் பிரபலங்களின், அரச குடும்பங்களின் உடைகள் வடிவமைத்தார்.
வாலென்டினோ தனது Valentino பிராண்டை 2012‑இல் கத்தார் Mayhoola மற்றும் பிரெஞ்சு Kering குழுக்களுக்கு விற்றார், தற்போதைய உரிமையாளர்கள் பிராண்டை தொடர்ந்து இயக்குகிறார்கள். அவரது தனிப்பட்ட சொத்துக்கள் வீடுகள், எழுதி வைத்த will படி வாரிசுகள் அல்லது அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுகின்றன.