VCK: ‘கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை!’ – தி.மு.க-வுடனான தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி? | Is Thiruma unhappy with Seat Sharing with DMK?

Spread the love

வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தி.மு.க-விடம் சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை என தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார். அதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

ஆளூர் ஷாநவாஸ்

ஆளூர் ஷாநவாஸ்

தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வி.சி.க ஏற்கனவே போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளும் தரப்பட்டன. கடந்த மார்ச் 27-ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்” எனப் பேட்டிக் கொடுத்தார்.

ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசும்போது, “ராயபுரம் கேட்டோம்.. அது கிடைக்கவில்லை, பல்லாவரம் கேட்டோம் அதை தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டார்கள்.. வானூர் கேட்டோம்.. கள்ளக்குறிச்சியை தந்தார்கள்’ என அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆக, தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி அடைந்திருக்கிறார் என்ற பேச்சு மேலோங்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *