Vedanta files case seeking permission to set up green copper plant in Thoothukudi-தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதிகோரி வேதாந்தா வழக்கு

Spread the love

காற்று, நிலம், நீர் மாசுபடுவதாகக் கூறி தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை  மூடிட தமிழக அரசு, கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

அந்த மனுவில், “தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதிகோரி தமிழக தொழில்துறை மற்றும் தமிழக சுற்றுச்சூழல் துறைகளின் செயலாளர்களுக்கு கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலக்கப்படவில்லை. எனவே, எங்கள் நிறுவனத்தின் மனுக்களை பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *