விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது.
ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதின.
இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால் அந்த அணி 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது.