மத்திய அரசின் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான தகவல் வெளியானதும் விஜய் மல்லையா தன் எக்ஸ் பக்கத்தில், “எவ்வளவு காலம் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னையும் பொதுமக்களையும் ஏமாற்றப் போகின்றன? நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், என்னிடமிருந்து ரூ.14,100 கோடி மீட்டதாகச் சொல்கிறார். ஆனால் வங்கிகள், ரூ.10,000 கோடி மட்டுமே மீட்டதாகக் கூறுகின்றன. அந்த ரூ.4,000 கோடி வித்தியாசம் ஏன்?

இப்போது, நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், நான் இன்னும் ரூ.10,000 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார். ஆனால் வங்கிகள், நான் ரூ.7,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது என்கின்றன. ஆனால், மீட்ட தொகைகளுக்கான கணக்கு அறிக்கை அல்லது கிரெடிட் பதிவு எதுவும் இல்லை.
என் தீர்ப்பின் அடிப்படையில் கடன் ரூ.6,203 கோடிதான். ஆனால் இப்போது அரசு, வங்கிகள் எல்லோரும் வேறு வேறு எண்களைச் சொல்கிறார்கள். எனவே, உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இது என்னைச் சார்ந்த நிலையில் மிகவும் பரிதாபகரமான சூழல்.