
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்… திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார்.
இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன.
1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01