பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
தகுதி நீக்கம்
அவர் எப்படியும் பதக்கம் வெல்வால் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதாக கூறி திடீரென வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக வினேஷ் போகத் அறிவித்து உள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார். இதனை விசாரித்து ஒலிம்பிக் போட்டி முடிவதற்கு முன்பே தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆந்திரா, தெலங்கானா உட்பட 7 மாநிலங்களுக்கு 8 புதிய ரயில்வே திட்டம்
நாளை தீர்ப்பு
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு இன்று வந்தது. ஆனால் தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 11 ந்தேதி) ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
நாளை ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.