இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது.
ஜனவரி 19 முதல் நாளன்று துவக்க நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகிக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்க மாவட்ட தலைவர் தியாகசந்தன், செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வேலூர் பெருமுகை அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பனிமலர் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் அணியும், இரண்டாம் இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தன.