மகாபாரதப் போரில் 18 நாட்கள்
– மானா பாஸ்கரன்
இது வெப் சீரிஸ்கள் கோலோச்சும் காலம். வித விதமான வெப் சீரிஸ்கள் பல மொழிகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பார்வையாளர்களால் வசீகரிக்கப்படும் இந்தத் தொடர் அனிமேட்டட் வகைமையைக் கொண்டதாகும்.
கடந்த அக்டோபர் 10ம் தேதி நெட் ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது ‘குருஷேத்ரா’ என்கிற புதிய வெப் சீரிஸ். வெளியான நேரத்தில் இருந்து, நேயர்களால் இந்தியாவில் அதிகளவில் தேடிச் சென்று கண்டுகளிக்கும் வெப் சீரிஸ் ஆக உள்ளது. அடிப்படையில் இந்தியில் எடுக்கப்பட்டிருந்தாலும் உலகளவில் 10 மொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு, தமிழில் ‘தர்மத்தின் போராட்டம்’ என்று டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்ல; ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், டாய், இந்தோனேசிய மொழிகள் என மொத்தம் 10 மொழிகளில் வெளியாகியுள்ளது, ‘குருஷேத்ரா.’
மகா பாரதத்தில் 18 நாட்கள் தொடர்ந்து நடந்த போர்தான் கதை. பிரமாண்டமாக காட்சிக்குள் அந்தப் போரைக் கொண்டுவந்து, பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார்கள்.
இரண்டு சீசனைக் கொண்ட, ‘குருஷேத்ரா’ வெப்சீரிஸ், ஒரு சீசனுக்கு 9 எபிசோட்களைக் கொண்டுள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு புகழ்பெற்ற இந்தி மொழி கவிஞர் குல்ஜார் பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் பிரமாண்ட வெப் சீரிஸ்ஸை அனுசிக்கா எழுதி இயக்கியுள்ளார்.
