இதற்குப் பதிலளித்த கனிமொழி, “நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்? கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே உங்களுக்காகத் தியாகம் செய்தோம். அதேபோல் இந்த முறை நீங்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்” எனச் சொல்லிவிட்டு வந்ததாகத் தகவல்.
இந்தச் சூழலில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தி.மு.க – காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தி.மு.க தலைவர் விரைவில் வெளியிடுவார்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ‘காங்கிரஸை விமர்சித்துப் பேசிய எம்.எல்.ஏ கோ. தளபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான், நாளை மறுநாள் கே.சி. வேணுகோபால் தமிழகம் வருகிறார்.