What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

Spread the love

லீடர் (தமிழ்):

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘லீடர்’ திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், அமிர்தா ஐயர், வி.டி.வி. கணேஷ், குழந்தை நட்சத்திரமான இயல் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காளிதாஸ் 2 (தமிழ்):

‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நிவாஸ், அஜய் கார்த்தி, அபர்னத்தி, பவனி ஸ்ரீ, கார்த்திக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Leader Movie
Leader Movie

நீளிரா (தமிழ்):

அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு, ரூபா கொடுவாயூர் ஆகியோர் நடித்துள்ள ‘நீளிரா’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கார்மேனி செல்வம் (தமிழ்):

ராம் சக்ரி எழுதி இயக்கியிருக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியானது.

பைக்கர் (தெலுங்கு):

ஷர்வானந்த், ராஜசேகர், மாளவிகா நாயர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைக்கர்’ நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வாழா 2 (மலையாளம்):

விபின் தாஸ் எழுதி தயாரித்திருக்கும் ‘வாழா 2’ திரைப்படத்தை சவின் சா இயக்கியுள்ளார். ஹஷீர், அலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வேதா சங்கர், விஜய் பாபு, பிஜு குட்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Biker Movie
Biker Movie

ஓடிடி ரிலீஸ்கள்:

ஹாப்பி பட்டேல் : கதர்நாக் ஜஸூஸ் (Happy Patel: Khatarnak Jasoos) (இந்தி) – Netflix
இஃபோரியா (Euphoria) (தெலுங்கு) – ETV Win
மிருத்யுஞ்சய் (Mrithyunjay) (தெலுங்கு) – Netflix
ஸம்ப்ரதாயிநீ சுப்பினி சுடபூசனி (Sampradayini Suppini Suddapoosani) (தெலுங்கு) – Netflix
வடம் (தமிழ்) – Sun NXT
மாயபிம்பம் (தமிழ்) – Sun NXT
சித்தாரே ஜமீ பர் (இந்தி) – SonyLIV
வத் 2 (Vadh 2) (ஹிந்தி) – Netflix

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *